தற்போதுள்ள கிரிப்டோ நாணய சேவை வழங்குநர்களிடமிருந்து தகவல்களை சேகரிப்பதற்கான கணக்கெடுப்பை இலங்கை மத்திய வங்கி ஆரம்பித்துள்ளது.
தற்போது அவர்களிடமிருந்து ஒரு கேள்வித்தாள் மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன், எதிர்காலத்தில் அவர்கள் மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும்.
பணமோசடி
உலகளாவிய ரீதியில் பணமோசடி போன்ற நடவடிக்கைகளுக்கு கிரிப்டோகரன்சிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனை தடுப்பதற்காக இந்த சேவை வழங்குநர்களைப் பதிவு செய்யும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

