சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) அதிகப்படியான தொகையை கடனாகப் பெற்று, அதைத்
திருப்பிச்செலுத்த வேண்டியுள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை 13 ஆவது இடத்தைப்
பிடித்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள 86 நாடுகள் மொத்தமாக சுமார் 162 பில்லியன் அமெரிக்க
டொலர்களை IMF-க்கு செலுத்த வேண்டியுள்ளன.
இதில், இலங்கை செலுத்த வேண்டியுள்ள
தொகை 2.3 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இந்த கடன் பட்டியலில் ஆர்ஜென்டினா (Argentina) முதலிடத்தில் உள்ளது.
செலுத்த வேண்டியுள்ள தொகை
இந்த
நாடு 56.83 பில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலுத்த வேண்டியுள்ளது.
யுக்ரைன் (Ukraine) 14.13 பில்லியன் டொலர்களுடன் இரண்டாவது இடத்திலும்,
எகிப்து (Egypt) 9.38 பில்லியன் டொலர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இலங்கைக்கு முன்னால் பாகிஸ்தான், ஈக்வடோர், ஐவரி கோஸ்ட், கென்யா, பங்களாதேஷ்,
கானா, அங்கோலா, கொங்கோ மற்றும் கோஸ்டா ரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.