2023ஆம் ஆண்டில், இலங்கை மில்லியன் கணக்கான ரூபாய் மதிப்புள்ள பல்வேறு
வடிவங்களில் பதப்படுத்தப்பட்ட அரிசியை பல நாடுகளுக்கு அனுப்பியதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா, வடதுருவப்பகுதி, வட அமெரிக்கா, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா
மற்றும் தெற்கு அரைக்கோள நாடுகளுக்கு இந்த அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
பெரும்போக மற்றும் சிறுபோக நெல் உற்பத்தி
அந்த காலகட்டத்தில் நெல் உற்பத்தி 4.5 மில்லியன் மெட்ரிக் தொன்களைத்
தாண்டியிருந்தது. இது சுமார் 13 மாதங்களுக்கு உள்ளூர் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக
இருந்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்,
விவசாயத் திணைக்களம் மற்றும் இலங்கை மத்திய வங்கியால் மேற்கோள் காட்டப்பட்ட
ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தின் தரவுகளின்
அடிப்படையில், பெரும்போக மற்றும் சிறுபோக நெல் உற்பத்தி 4.51 மில்லியன்
மெட்ரிக் தொன்களாக இருந்தது.
எனினும் 2024-25 உற்பத்தியானது, வெள்ள சேதம், நோய் மற்றும் பயிர் பூச்சிகள்
காரணமாக ஐந்து ஆண்டு சராசரியை விட 6வீதம் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி உற்பத்தி 2.2 மில்லியன் மெட்ரிக் தொன்னாக இருக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த
சமரசிங்க இந்த வாரம் நாடாளுமன்றத்தில் 2023 மற்றும் 2024 நெல் உற்பத்தி
புள்ளிவிபரங்களை மேற்கோள் காட்டினார்.