முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளறப்படும் இறுதி யுத்த ஆதாரம் : ஆபத்தில் சிக்கப் போகும் அநுர அரசு

சுதந்திரம் அடைந்தது முதல் இலங்கை அரசு தமிழருக்கு எதிராக இனப்படுகொலை நடத்தி வருகிறது.

அந்த வகையில் 2009ஆம் ஆண்டு இலங்கை அரச படைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நான்காவது கட்டமாக போர் நடைபெற்றது.

போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்த அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே, 2006-ஆம் ஆண்டு ஒரு முரண்நிலை தோன்றி ஒரு விரோதப் போக்கு ஆரம்பமானது.

கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக இலங்கை அரசு ஜனவரி 2, 2008 அன்று அறிவித்தது. 

இதன்படி தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து அதிகாரபூர்வமாக விலகுவதாகவும், அதற்கான 14 நாள் கால அவகாசத்தை வழங்குவதாகவும் இலங்கை அரசாங்கம், உடன்படிக்கையின் அனுசரணையாளரான நோர்வேயின் தூதரகத்திற்கு எழுத்து மூலம் ஜனவரி 3 அன்று அறிவித்தது.

போரின் இறுதியான காலகட்டம்

நான்கு ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டிருந்த போர் நிறுத்தத்தை முறித்துக் கொண்டு அரசபடைகள், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பல பகுதிகளைக் கைப்பற்றின. 

கிளறப்படும் இறுதி யுத்த ஆதாரம் : ஆபத்தில் சிக்கப் போகும் அநுர அரசு | Sri Lanka Final War Anura Evidence Expose

போரின் இறுதியான காலகட்டத்தில், வட கிழக்குப் பிரதேசத்தில் உள்ள நந்திக் கடலேரியைச் சூழ்ந்த பகுதியில் சண்டை மிக உக்கிரமாக நடந்தது. 

மூன்று இலட்சம் வரையான தமிழ்ப் பொதுமக்கள் போர் நடந்த இடத்தினுள்ளே முடக்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து நடைபெற்ற போரினால் இலங்கைப் படை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த அனைத்துப் பகுதிகளையும் கைப்பற்றியது. 

இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கடைசிப் பிரதேசமும் வந்தடைந்த, 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள், போர் முடிவுக்கு வந்ததாகவும், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மரணமடைந்துவிட்டதாகவும் இலங்கை அரசாங்கம் அறிவித்தது.

இந்த இறுதிப் போரில் இலங்கை இராணுவத்தினர் போர்க்குற்றங்கள் பல செய்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்ட போதும் இலங்கை அரசு இதனை மறுத்து வருகின்றது.

இந்த நிலையில் 16 வருடங்கள் இந்த வலிகளுடன் வாழும் மக்கள், போரில் காணாமலாக்கப்பட்டோருக்கான நீதியை வேண்டி இன்றும் போராடிக்கொண்டிருக்கின்றனர்.

யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் எத்தனையோ அரசுகள் மாறினாலும் இன்று வரையில் எம் தமிழ் மக்களுக்கான நீதி என்பது மறுக்கப்பட்ட ஒன்றாகவே காணப்படுகிறது.

அண்மையில் கனடாவில் தமிழினப் படுகொலைகளை நினைவு கூருவதற்கு அமைக்கப்பட்ட “தமிழின அழிப்பு நினைவு தூபி அமைக்கப்பட்டது.

தாய் மண்ணில் நீதி மறுக்கப்பட்டாலும் சர்வதேச தளம் ஒன்றில் எமக்கான அங்கீகாரம் கிடைக்கின்ற போதிலும் கூட இலங்கை அரசு அவ்வாறான இனப்படுகொலைகளை செய்யவில்லை என மறுத்து வருகின்றது.

இலங்கை தமிழர்கள் தமது உயிர்நீத்த உறவுகளின் 16ஆவது நினைவுதினத்தை இன்று (18.05.2025) அனுஷ்டிக்கும் நிலையில், 2009 இன் இறுதி யுத்த ஆதாரத்தை கேட்டு ஆபத்தில் சிக்கப் போகும் தேசிய மக்கள் சக்தி அரசு தொடர்பில் ஆராய்கிறது ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி, 

https://www.youtube.com/embed/cXv-29MfbhE

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.