முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை – இந்திய புரிந்துணர்வு ஒப்பந்தம் : வெடித்த சர்ச்சை

பாதுகாப்பு ஒத்துழைப்புக்காக இந்தியாவிற்கும் (India) இலங்கைக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (MDMK) பொதுச் செயலாளர் வைகோ (Vaiko) கண்டித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் (Narendra Modi) இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் (Anura Kumara Dissanayake) அண்மையில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இரு நாடுகளின் பாதுகாப்புப் படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு உட்பட ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர்.

இனப்படுகொலை

இது தொடர்பில் வைகோ கருத்து தெரிவிக்கையில், “இலங்கைக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் அநுர  திஸாநாயக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.

இலங்கை - இந்திய புரிந்துணர்வு ஒப்பந்தம் : வெடித்த சர்ச்சை | Sri Lanka India Memorandum Of Understanding

இந்தியா – இலங்கை இடையே ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன அதில் முக்கியமானது, இந்தியா – இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தமாகும்.

இதன் அடிப்படையில், இந்திய இராணுவம் மற்றும் இலங்கை இராணுவத்திற்குமிடையே கூட்டு நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு ஒத்துழைப்பும் உதவியும் வழங்கும்.

[SWCODVI
]

இராணுவ புரிந்துணர்வு 

இது இலங்கை அரசுடன் போடப்பட்டிருக்கும் முதல் இராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

எங்கள் தொப்புள் கொடி உறவுகளான இலங்கைத் தமிழர்கள் ஒரு லட்சத்து 37 ஆயிரம் பேரை கொன்று குவித்தது இலங்கை இராணுவம்தான்.

இலங்கை - இந்திய புரிந்துணர்வு ஒப்பந்தம் : வெடித்த சர்ச்சை | Sri Lanka India Memorandum Of Understanding

ஆயிரக்கணக்கான தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி சிங்கள இராணுவம் கொன்றது.

தங்கள் மண்ணின் விடுதலைக்காக பல்லாயிரக்கணக்கான வீரர்களை பலி கொடுத்து தாயகத்தை மீட்பதற்குப் போராடிய விடுதலை இயக்கத்தைக் கருவறுத்தது சிங்கள இராணுவம்.

இனப்படுகொலை

யுத்தக் களத்தில் போராடிய தமிழ் வாலிபர்கள் எட்டு பேரை நிர்வாணப்படுத்தி கைகளைக் கட்டி பின்னந்தலையில் சிங்கள இராணுவம் சுட்டுக் கொன்றதையும், புலிகளின் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசை ப்ரியாவை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி சிதைத்து சின்னாபின்னமாக்கி சுட்டுக் கொன்றதையும் இங்கிலாந்தின் சேனல் -4 தொலைக்காட்சி வெளியிட்டு உலகின் மனசாட்சியை உலுக்கியது.

இந்தக் கொடூர காட்சிகளைக் கண்ட அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும், இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கண்ணீர் விட்டுக் கதறினர்.

இலங்கை - இந்திய புரிந்துணர்வு ஒப்பந்தம் : வெடித்த சர்ச்சை | Sri Lanka India Memorandum Of Understanding

இனப்படுகொலை நடத்திய சிங்கள இராணுவத்தை ஹேக் நகரில் உள்ள பன்னாட்டு நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரித்து தண்டிக்க வேண்டும் என்று தமிழ் இனம் போராடிக் கொண்டிருக்கிறது.

இந்தநிலையில், இலங்கை இராணுவத்தோடு பிரதமர் நரேந்திர மோடி இராணுவ ஒப்பந்தம் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமின்றி தமிழ் மக்களுக்கு செய்திருக்கும் கொடும் துரோகமாகும்.

தமிழ் இனத்தை வஞ்சித்திருக்கும் பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய “சிறிலங்கா மித்ர விபூஷண” விருது வழங்கப்பட்டிருப்பதும் பொருத்தமானது என்றுதான் தமிழ் மக்கள் கருதுவார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/yOAPiZDDQAA

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.