முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

‘தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம்’ : கனடாவுடன் மீண்டும் மோதும் இலங்கை

கனடாவில்(canada) உள்ள பிராம்ப்டன் பகுதியில் ‘தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம்’ அமைக்கும் திட்டத்திற்கு இலங்கை அரசாங்கம் மீண்டும் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

ரொறன்ரோவிலுள்ள(toronto) இலங்கைத் தூதரக ஆணையாளர் துஷார ரொட்ரிகோ(Thushara Rodrigo), இலங்கையின் எதிர்ப்பைப் பதிவு செய்து பிராம்ப்டன் மேயர் பட்ரிக் பிறவுனுக்கு(Patrick Brown) கடிதம் எழுதியுள்ளார்.

இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கை, கனடாவுடன் பல சந்தர்ப்பங்களில் முரண்பாட்டை வளர்த்துக் கொண்டுள்ளது.

கனடா பிரதமர் மீது தாக்குதல் தொடுத்த இலங்கை

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான ஆயுத மோதலின் போது, ​​”இனப்படுகொலை” என்ற “மோசமான குற்றச்சாட்டை” முன்வைத்து, ‘தேர்தல் வாக்கு வங்கி அரசியலில்’ ஈடுபட்டதாக, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை, மே மாதம், இலங்கை அரசாங்கம் தாக்கியது.

‘தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம்’ : கனடாவுடன் மீண்டும் மோதும் இலங்கை | Sri Lanka Locks Horns With Canada

தமிழ் இனப்படுகொலை நினைவுதினம்

கனடாவின் நாடாளுமன்றம் மே 18 ஐ ‘தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக’ அங்கீகரிக்க ஏகமனதாக வாக்களித்ததாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau ) குறிப்பிட்டார்.

‘தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம்’ : கனடாவுடன் மீண்டும் மோதும் இலங்கை | Sri Lanka Locks Horns With Canada

“மோதலின் போது இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறல் மற்றும் இலங்கையில் அனைவரும் எதிர்கொள்ளும் கஷ்டங்களுக்கு நாங்கள் எப்போதும் துணை நிற்போம். 2023 இல், நான்கு முன்னாள் இலங்கை அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக ஆயுத மோதலின் போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு பதிலளிக்கும் வகையில் நாங்கள் பொருளாதாரத் தடைகளை விதித்தோம். ” என்று ட்ரூடோ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அவரது அறிக்கை கனடாவின் கூட்டாட்சிக் கொள்கைக்கு எதிரானது, இது போர்க்காலத்தில் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இனப்படுகொலைக்கு சமமானவை அல்ல என இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.