இலங்கையின் இலத்திரனியல் வாகனத் துறையில் பிரமிக்க வைக்கும் புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
அதாவது உலகத்திலேயே மிகவும் விரைவான சார்ஜிங் முறைமையில் இலத்திரனியல் முச்சக்கரவண்டி உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட பெட்ரோல் பிரச்சினைகளுக்கு தீர்வாக இலகுவாக வீட்டிலேயே சார்ஜ் செய்யக்கூடிய வகையில் இது காணப்படுகின்றது.
குறித்த முச்சக்கரவண்டியானது சார்ஜ் செய்ததும் 150 கிலோ மீற்றர் வரை செல்லக்கூடிய வகையில் உள்ளது.
மேலும் எதிர்பாராத வகையில் விபத்து நிகழும் போது சாரதியை பாதுகாக்கக் கூடிய வகையில் அதன் கட்டமைப்புக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இலத்திரனியல் முச்சக்கரவண்டி தொடர்பிலான விடயங்களை கீழுள்ள காணொளியில் அறிந்து கொள்ளலாம்….

