இலங்கை நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் தற்போதைய அரசாங்கம் புதிய திருத்தங்களை ஏற்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்குத் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சட்டமா அதிபர் சார்பாக முன்னிலையான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, கடந்த காலத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்ட விதம் சட்டத்திற்கு எதிரானது என தெரிவித்துள்ளார்.
அடிப்படை உரிமைகள்
இது தொடர்பிலான நான்கு அடிப்படை உரிமைகள் மனுக்கள் இன்று (05) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மனுக்களை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் சிறிலங்கா உட்பட பல தரப்பினர் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.