நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று (04.12.2024) இடம்பெறவுள்ளது.
சபாநாயகர் அசோக ரன்வல தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று மாலை 5.30 முதல் இரவு 9.30 வரை அனர்த்த நிலைமை தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏனவே, தீர்மானிக்கப்பட்ட வகையில் இன்று முற்பகல் 9.30 முதல் மாலை 5 மணி வரையில் ஜனாதிபதி முன்வைத்த அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதம் இடம்பெற்று 5 மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினால் கொண்டு வரப்படும் குறித்த ஒத்திவைப்பு வேளை விவாதம் நடைபெறும் என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
https://www.youtube.com/embed/BIIOvcgLhHk