இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் கூற்றுப்படி, 2025 நவம்பர் மாதத்தில் இலங்கைக்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 212,906 என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு இதுவரை இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 2,103,593 ஆகும்.
இந்தியாவின் எண்ணிக்கை
நவம்பர் மாதத்தில் அதிகபட்சமாக 8,530 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது நவம்பர் 22 அன்று பதிவாகியுள்ள அறிக்கையினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இதுவரை இந்தியாவில் இருந்து 474,796 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 191,742 பயணிகளும் , ரஷ்யாவிலிருந்து 158,593 பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 131,259 பயணிகளும்மற்றும் சீனாவிலிருந்து 121,671 பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

