கடந்த ஆண்டில் சுமார் 350 காவல்துறை அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்ரதை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.
மக்கள் பாதுகாப்பு
களுத்துறை காவல்துறை பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதெ அவர் இதனை தெரிவித்துள்ளார்.

காவல்துறையை அரசியலற்றதாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அதிகாரிகள் குழு இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

