நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள அனர்த்த நிலைமை காரணமாக ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 638 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் 191 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது
அந்த நிலையம் இன்று (09) காலை 09.00 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய அறிவிப்பில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
கண்டி மாவட்டத்தில் பதிவு
மேலும், 501,958 குடும்பங்களைச் சேர்ந்த 1,737,330 பேர் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின் படி, அதிகளவான மரணங்களாக 234 மரணங்கள் கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

இதற்கிடையில் நுவரெலியா மாவட்டத்தில் 89 மரணங்களும், பதுளை மாவட்டத்தில் 90 மரணங்களும், குருநாகலில் 61 மரணங்களும், கேகாலை மாவட்டத்தில் 32 மரணங்களும், புத்தளத்தில் 37 மரணங்களும் மற்றும் மாத்தளை மாவட்டத்தில் 28 மரணங்களும் பதிவாகியுள்ளன.
அத்துடன் 20,373 குடும்பங்களைச் சேர்ந்த 63,628 பேர் தொடர்ந்தும் பாதுகாப்பு நிலையங்களில் தங்கியுள்ளதுடன் 5,354 வீடுகள் முழுமையாக அழிவடைந்துள்ளதுடன், 81,621 வீடுகளுக்குப் பகுதியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


