இந்த வருடத்தில் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை இலங்கைக்கு 56,567 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் (SLTDA) தெரிவித்துள்ளது.
இது நாட்டின் சுற்றுலா துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை குறிக்கின்றது.
இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் தினசரி வருகை 5,634 முதல் 6,934 வரை காணப்பட்டுள்ளதுடன் ஏப்ரல் 5 ஆம் திகதி அதிகபட்ச எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வருகை
இந்நிலையில், ஜனவரி முதல் ஏப்ரல் 9 வரை, இலங்கை 7,78,843 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இதற்கிடையில், மார்ச் 2025க்கான சுற்றுலா வருவாய் 354 மில்லியன் அமெரிக்க டொலர்களை (ரூ. 104.8 பில்லியன்) எட்டியுள்ளது.
இது முந்தைய மாதத்தை விட 4.6% அதிகரிப்பையும், ஆண்டுக்கு ஆண்டு ரூபாய் அடிப்படையில் 4.6% அதிகரிப்பையும் பிரதிபலிக்கிறது.
2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான மொத்த வருவாய் இப்போது 1.12 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது, இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 9.4% அதிகமாகுமென குறிப்பிட்டுள்ளது.

