ரணில் விக்ரமசிங்க (ranil wickremesinghe)ஆட்சியை இழந்தால், நிச்சயமாக இலங்கை (sri lanka)மீட்க முடியாத ஆப்கானிஸ்தானாக(afghanistan) மாறும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன(bandula gunawardana) இன்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
முன்னர் எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார இழப்பு ஏற்பட்டதாகவும் அது தற்காலிகமானது என தெரிவித்த அவர் மீண்டும் அவ்வாறான நிலை ஏற்பட்டால் எரிபொருள், எரிவாயு மின்சாரம் இல்லாத நாடு என்றென்றும் உருவாகும் எனவும் குறிப்பிட்டார்.
மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்காது
இந்த சந்தர்ப்பத்தை இழந்தால் மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்காது என தெரிவித்த குணவர்தன, தேவதை உலகங்களை உருவாக்குவோம் என தெரிவிப்பவர்களால் நாட்டில் அனர்த்தத்தை ஏற்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் முதுகெலும்பு ரணில் விக்ரமசிங்க என்ற தலைவருக்கு மட்டுமே இருப்பதாக அமைச்சர் மேலும் கூறினார்.