ஐக்கிய அரபு அமீரகத்தில் (United Arab Emirates) தற்போது நிலவும்
மோசமான காலநிலை காரணமாக சில விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் (SriLankan Airlines) அறிவித்துள்ளது.
டுபாய் (Dubai) சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளநீர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன.
கனடாவில் தொழில் புரிவோருக்கு ஏற்படவுள்ள சிக்கல் – வெளியான அதிர்ச்சி தகவல்
விமான சேவைகளை இரத்து
அந்தவகையில், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து (Katunayake Airport) இன்று (17.4.2024) மாலை 6 25 மணிக்கு துபாய்க்கு புறப்படவிருந்த மற்றும் அங்கிருந்து இலங்கைக்கு (Srilanka) பயணிக்கவிருந்த விமான சேவைகளை இரத்துச் செய்துள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) அறிவித்துள்ளது.
வெப்பநிலையும் அதிகரித்து காணப்படும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் (United Arab Emirates) முழுவதும் நேற்று பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கனமழை மற்றும் வெள்ளம் எதிரொலியாக, விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் கொடுர செயல் – கூரிய ஆயுதத்தால் மனைவியை தாக்கிய கணவன்
இஸ்ரேல் மீதான தாக்குதல் தொடர்பில் ஈரான் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |