சர்வதேச மகளிர் தினத்தைக் குறிக்கும் வகையில் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் விமானம் 03/08 அன்று கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தாய்லாந்தின்(thailand) பாங்கொக்கிற்குப் புறப்பட்டது.
இந்த விமானத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், தலைமை விமானி உட்பட முழு விமானக் குழுவினரும் முழுக்க முழுக்க பெண்களைக் கொண்டிருந்தனர்.
ஏர் பஸ் விமானத்தை தயார் செய்த சிறிலங்கன் எயார் லைன்ஸ்
இந்த விமானத்திற்காக சிறிலங்கன் ஏர்லைன்ஸ் ஒரு ஏர்பஸ் A320 விமானத்தை பயன்படுத்தியது, இதில் மாதவி விஜேசிங்க தலைமை விமானியாகவும், அயோத்யா வனசிங்க துணை விமானியாகவும் பணி புரிந்தனர்.
96 பயணிகளுடன் பறந்த விமானம்
விமானக் குழுவினர் 8 பேர் மற்றும் 96 பயணிகள் விமானத்தில் இருந்தனர்.
இந்த சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், UL-405, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து 03/08 அன்று காலை 07.30 மணிக்கு தாய்லாந்தின் பாங்கொக்கிற்கு புறப்பட்டது.
03/08 அன்று மதியம் 12.30 மணிக்கு தாய்லாந்தின் பாங்கொக் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.