ஜப்பானில் இருந்து ரூ.20 மில்லியன் மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் பாரிய வாகன இறக்குமதி மோசடி தொடர்பாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, குற்றப் புலாய்வு திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காவல்துறை வட்டாரங்களின்படி, மஹரகமவில் வசிக்கும் சந்தேக நபர், ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 18 வாகனங்களுக்கான ஆரம்பக் கொடுப்பனவுகளைத் தவிர்த்து, அதன் மூலம் அந்தப் பரிவர்த்தனைகளுக்குத் தேவையான நிதியை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இதேவேளை, சந்தேக நபர் ஜப்பானில் இருந்து இலங்கைக்கு மொத்தம் 68 வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

