10 ஆவது நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி முஹம்மத் ரிஸ்வி சாலி (Mohammad Rizvie Salih) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவரின் பெயரை முன்மொழிய அமைச்சர் சரோஜா போல்ராஜ் அதனை வழிமொழிந்தார்.
நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் ஹேமாலி வீரசேகர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர்
அத்துடன், பத்தாவது நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தவிசாளராக ஹேமாலி வீரசேகர தெரிவு செய்யப்பட்டார்.
இதேவேளை, புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் அசோக்க ரன்வல நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய, அசோக்க ரன்வலவின் (Ashoka Ranwala) பெயரைப் பரிந்துரைத்தார், அமைச்சர் விஜித ஹேரத் அதனை உறுதிப்படுத்தினார்.
அதன்படி, சபாநாயகராக அசோக்க ரன்வல ஏகமனதாக பெயரிடப்பட்டார்.