இலங்கை ஏதிலியொருவருக்கு பிரான்ஸில் (France) பத்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படலாம் என்று அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவுக்கு இலங்கையர்களை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
2001இல் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் இங்கிலாந்துக்கு சென்றபின் சதாசிவம் சிவகங்கனுக்கு (Sathasivam Sivagankan) பிரான்ஸில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளது.
திடீர் மாற்றத்திற்குள்ளாகியுள்ள தங்கத்தின் விலை: இன்றைய நிலவரம்
இலங்கை ஏதிலி
எனினும், இலங்கையில் மோதல்கள் இடம்பெற்ற 2004 முதல் 2005 வரை இலங்கைக்கு திரும்பியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்திற்கு இலங்கையர்களை கடத்தும் சர்வதேச குழுவின் முன்னணி உறுப்பினராக சிவகங்கன் இருப்பதாக பிரான்ஸின் சட்டத்துறையினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ருமேனியா, இத்தாலி, ஜெர்மனி, ஹங்கேரி, உக்ரைன், ஸ்லோவேனியா மற்றும் ஒஸ்திரியாவிலிருந்து கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சை பெறுபேறு வெளியாகும் திகதி: கல்வி அமைச்சர் அறிவிப்பு
கிடைக்கவுள்ள சிறைத்தண்டனை
இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிவகங்கன் பத்து ஆண்டுகள் வரையான சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும்.
இந்நிலையில் இங்கிலாந்தின் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், அவர் விரைவில் பிரான்ஸிற்கு நாடு கடத்தப்படவுள்ளதோடு அதுவரை அவரை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியா – பாகிஸ்தான் ரி20 போட்டியை குறி வைக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்: சுவர் ஒட்டிகளால் பரபரப்பு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |