இலங்கை(sri lanka) உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாசனை பொருட்களுக்கு வரிச் சலுகை வழங்குமாறு அமெரிக்காவில் உள்ள வாசனை பொருட்கள் இறக்குமதியாளர்கள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம்(donald trump) கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரியை விதித்தார், பின்னர் அந்த வரிகளை விதிப்பதை 90 நாட்களுக்கு நிறுத்திவைக்க நடவடிக்கை எடுத்தார்.
வரிகளைக் குறைக்குமாறு வாசனை இறக்குமதியாளர்கள் கோரிக்கை
எனினும், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளைக் குறைக்குமாறு வாசனை இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையின் இலவங்கப்பட்டை தொடர்பான பொருட்களில் 15 சதவீதம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மேலும், இலங்கையின் றப்பர் சார்ந்த பொருட்களில் 33 சதவீதமும், தேங்காய் சார்ந்த பொருட்களில் 18 சதவீதமும் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.