முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

2021 ஆம் ஆண்டு முதல் வெளிநாடு ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அறுபது இலங்கைத் தமிழ் அகதிகள்

Courtesy: Sivaa Mayuri

தாங்கள் உயிர் இல்லாத உடல்களாக வாழ்வதாக டியாகோ கார்சியாவில் (Diego Garcia) வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள் அதிருப்தி குரல் வெளியிட்டுள்ளனர்.

2021ஆம் ஆண்டு முதல் இந்திய பெருங்கடலின் டியாகோ கார்சியா தீவில் குறைந்தது 16 சிறுவர்கள் உட்பட அறுபது இலங்கைத் தமிழ் அகதிகள் ‘சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்’ என்று இங்கிலாந்தின் ‘த வீக்‘ செய்தித்தாள் குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த தீவுக்கான சட்டப்பிரச்சினைகளுக்கு மத்தியில் அது தமிழ் புலம்பெயர்ந்தோருக்கான சிறையாக மாறியுள்ளதாக ‘த வீக்‘ குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க இராணுவம்

2021ஆம் ஆண்டில், துன்புறுத்தல்களிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக இலங்கைத் தமிழர்கள் புகலிடம் கோரி கனடாவுக்குச் செல்ல முயன்றபோது, அவர்களது கடற்றொழில் படகில் கசிவு ஏற்பட்டது.

இதனையடுத்து, அங்குள்ள கடற்படை உறுப்பினர்கள் அவர்களை மீட்டு குறித்த தீவில் தங்கவைத்தனர். இந்த தீவு பிரித்தானியாவினால் அமெரிக்காவிற்கு குத்தகைக்கு விடப்பட்ட தீவாகும்.

2021 ஆம் ஆண்டு முதல் வெளிநாடு ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அறுபது இலங்கைத் தமிழ் அகதிகள் | Sri Lankan Tamil Refugees Voiced Their Displeasure

இந்த தீவு, 1966ஆம் ஆண்டில் அமெரிக்க தளத்துக்காக 50 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. எனினும் அது, நீடிக்கப்பட்டு இப்போது 2036ஆம் ஆண்டிலேயே உடன்படிக்கை காலாவதியாகவுள்ளது.

எனவே, டியாகோ கார்சியா தொழில்நுட்ப ரீதியாக பிரித்தானிய பிரதேசத்தில் இருந்தாலும், தீவின் பெரும்பகுதி அமெரிக்க இராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்தநிலையில், அங்குள்ள இலங்கைத் தமிழர்கள் 7 அடி உயர உலோக வேலியால் சூழப்பட்ட ஒரு கால்பந்து ஆடுகளத்தின் அளவுள்ள தற்காலிக கூடார முகாமில் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

தீவின் அதிகாரிகள்

கூடாரங்களில் எலிகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் அதிகளவில் உள்ளதாக அங்குள்ளோர் தெரிவித்துள்ளனர். எனவே, தாம் உயிர் இல்லாத உடல்களாக வாழ்வதாக அகதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் பலர் தாம் தமிழர்கள் என்ற காரணத்தினால் இலங்கை பாதுகாப்புப் படையினரின் சித்திரவதை மற்றும் துன்புறுத்தல்களில் இருந்து தப்பித்து வருவதாகக் கூறியுள்ளனர்.

2021 ஆம் ஆண்டு முதல் வெளிநாடு ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அறுபது இலங்கைத் தமிழ் அகதிகள் | Sri Lankan Tamil Refugees Voiced Their Displeasure

தீவின் அதிகாரிகள், தம்மை கைதிகளைப்போன்று நடத்துவதாகவும் அகதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்தநிலையில், பலர் அங்கு தமது உயிரைப் போக்கிக்கொள்ளும் முயற்சிகளிலும் ஈடுபட்டனர்.

அவ்வாறான மூவர், பிரித்தானியாவுக்கும் ருவாண்டாவுக்கும் இடையிலான உடன்படிக்கையின் கீழ் ருவாண்டாவுக்கு அனுப்பப்பட்டு, அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.