முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஐரோப்பிய எல்லையில் சிக்கிய இலங்கையர்கள் யார்….! விசாரணையில் களமிறங்கிய இன்டர்போல்

ஐரோப்பிய எல்லையில் போலி ஆவணங்களுடன் சிக்கிய மூன்று இலங்கையர்கள் தொடர்பில் இன்டர்போல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

போலி ஆவணங்களுடன் எல்லையை கடக்க முயன்றபோது அல்பேனிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 3 இலங்கையர்களும் பாதாள உலக குழுக்கள் அல்லது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டார்களா என்பது குறித்து இன்டர்போல் விசாரணையை ஆரம்பித்துள்ளது.

அல்பேனிய-வடக்கு மாசிடோனிய எல்லைக்கு அருகிலுள்ள கபே எல்லையை கடக்க முயன்றபோது மூன்று இலங்கையர்களும் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையர்கள் யார்

இவர்கள் இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஐரோப்பிய எல்லையில் சிக்கிய இலங்கையர்கள் யார்....! விசாரணையில் களமிறங்கிய இன்டர்போல் | Sri Lankans Caught In Albania Investigations

பாதாள உலக தலைவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களான கொஸ்கொட ரணா, பரேய் சுத்தா மற்றும் மிதிகம சூட்டி ஆகியோரே கைது செய்யப்பட்டதாக தகவல் ஒன்று கிடைத்ததனை தொடர்ந்து குற்றப் புலனாய்வு திணைக்களம் இந்த விடயத்தில் கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பாக இன்டர்போலும் தகவல்களைப் பரிமாறிக்கொண்டுள்ளது.

இன்டர்போல் விசாரணை

அதற்கமைய, 3 சந்தேக நபர்களின் கடவுச்சீட்டு நகல்களை இலங்கை அதிகாரிகள் பெற்றுக் கொண்டு ஆய்வு செய்ததில், அந்த மூவரும் தகவல் கிடைத்த பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ள பாதாள உலக குற்றவாளிகள் அல்ல என்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஐரோப்பிய எல்லையில் சிக்கிய இலங்கையர்கள் யார்....! விசாரணையில் களமிறங்கிய இன்டர்போல் | Sri Lankans Caught In Albania Investigations

அவர்களின் முகங்களும் சரிபார்க்கப்பட்டு, அவர்கள் பாதாள உலக குற்றவாளிகள் அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எனினும் இந்த இலங்கையர்களின் அடையாளங்களை மேலும் உறுதிப்படுத்த விசாரணைகள் நடைபெற்று வருவதாக அதிகாரி மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்