தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் ப.உதயராசா இலங்கைக்கான சீன(China) நாட்டின் அரசியல் உயர்ஸ்தானிகர் சின் லிஹோங்கை சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பானது, நேற்றையதினம்(10) கொழும்பில் உள்ள சீன உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
வன்னி மக்களின் நலன்
இதன்போது வன்னி பிரதேசத்தில் சீன நாட்டின் நிறுவனத்தினூடாக பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும், மக்களின் பொருளாதாரத்திற்கும், கைத்தொழில்களை ஊக்குவிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த சந்திப்பானது எதிர்காலத்தில் வன்னி மக்களின் நலனுக்கு ஏதுவாக இருக்கும் என சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.