முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பங்களாதேஷில் உச்சக்கட்ட வன்முறை : இலங்கையர்களின் நிலை குறித்து அமைச்சர் தகவல்

பங்களாதேஷில் (Bangladesh) ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக அங்குள்ள இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (
Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (23.7.2024) அறிக்கை ஒன்றை சமர்ப்பித்த அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பங்களாதேஷில் உள்ள இந்தியர்கள் (india) தங்கள் பகுதியை விட்டு வெளியே செல்வதை குறைத்துக் கொள்ளுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

வன்முறை சம்பவங்கள்

1971 பங்களாதேஷில் விடுதலைப் போரில் பங்கேற்ற வீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணிகளில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை இரத்து செய்யக்கோரி பங்களாதேஷில் போராட்டம் வெடித்துள்ளது.

பங்களாதேஷில் உச்சக்கட்ட வன்முறை : இலங்கையர்களின் நிலை குறித்து அமைச்சர் தகவல் | Srilanka India Student Quota Protest In Bangladesh

மாணவர்களால் அமைதி வழியில் தொடங்கிய போராட்டத்தில், காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் தீவிரமடைந்து, ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

வன்முறை சம்பவங்களில் குறைந்தது 115 பேர் உயிரிழந்ததாகவும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய தூதரகம் எச்சரிக்கை

பங்களாதேஷில் சிக்கித் தவித்த தமிழக மாணவர்கள் 131 பேர் பாதுகாப்பாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷில் உச்சக்கட்ட வன்முறை : இலங்கையர்களின் நிலை குறித்து அமைச்சர் தகவல் | Srilanka India Student Quota Protest In Bangladesh

மாணவர்கள் அங்கிருந்து இந்தியாவின் அசாம் மாநிலம் குவஹாட்டிக்கு அழைத்து வரப்பட் அங்கிருந்து 2 விமானங்கள் மூலம் 49 மாணவ மாணவிகளும் நேற்று முன்தினம் சென்னை அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இரண்டாம் கட்டமாக 82 மாணவர்கள் விமானம் மூலம் நேற்று இரவு சென்னை அழைத்து வரப்பட்டனர்.

மாணவர்கள் அழைத்து வருவதற்கான விமான பயணச்சீட்டு கட்டணம் முழுவதும் தமிழக அரசே ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்