முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இஸ்ரேலின் காய்நகர்த்தல் பின்னணியில் இலங்கையின் முக்கிய விசாரணைப் பிரிவு

இஸ்ரேலின் பயங்கரவாத நடவடிக்கைகளை கண்டிக்க முடியாத அளவுக்கு தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடு காணப்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், இஸ்ரேலுக்கான கருவியாக பயங்கரவாத விசாரணைப்பிரிவு  பயன்படுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 

திருகோணமலை சம்பவம்

திருகோணமலையில் இடம்பெற்ற சம்பவத்தை நாங்கள் அனுமதிப்பதில்லை. என்றாலும் இதுதொடர்பில் நாங்கள் கேள்வி எழுப்பினால் அங்கு பெளத்தர்கள் இருக்கிறார்கள்.

இஸ்ரேலின் காய்நகர்த்தல் பின்னணியில் இலங்கையின் முக்கிய விசாரணைப் பிரிவு | Srilanka Investigative Unit Context Israel Move

அதனால் பெளத்த விகாரை அமைப்பதில் என்ன தவறு என கேட்பீர்கள். ஆனால் யூதர்கள் இல்லாத நிலையில் ஏன் யூத வழிபாட்டு நிலையம் அமைக்கப்படுகிறது என கேட்கிறோம்.

கொழும்பில் யூதர்களின் சபாத் இல்லம் அமைக்கப்படுவது தொடர்பி்ல் இந்த சபையில் கேட்கப்பட்டபோது, அது அதிகாரம் அளிக்கப்படாத ஒன்று என பிரதமர் சபையில் தெரிவித்திருந்தார்.

இதனை அடிப்படையாகக்கொண்டு, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒருவர் இதுதொடர்பில் மாநகர சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள மாநகர மேயரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டபோது,

அது தொடர்பில் குறித்த உறுப்பினரை குற்றப்புலனாய்வு பிரவுக்கு அழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

சபாத் இல்லம் மூடப்படவேண்டும் என பொதுத்துவில் பிரதேச சபையில் பிரேரணை கொண்டுவந்து நிறைவேற்றப்பட வேண்டும் என முகப்புத்தகத்தில் பதிவிட்ட இளைஞர் ஒருவர் பொத்துவில் பொலிஸாரால் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தாக்குதல்

குற்றப்புலனாய்வு பிரிவை ஏன் இவ்வாறு துஷ்பிரயோகம் செய்ய வேண்டு்ம் என கேட்கிறோம். மேலும் இஸ்ரேல் அண்மையில் கட்டார் மீது பயங்கரவாத தாக்குதல் ஒன்றை நடத்தி இருந்தது.

இஸ்ரேலின் காய்நகர்த்தல் பின்னணியில் இலங்கையின் முக்கிய விசாரணைப் பிரிவு | Srilanka Investigative Unit Context Israel Move

இதுதொடர்பில் வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் கட்டார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் நாங்கள் அவதானம் செலுத்தி இருக்கிறோம் என்றே தெரிவித்திருக்கிறது.

கட்டார் மீது விமான தாக்குதல் நடத்திய இஸ்ரேலின் பெயரை குறிப்பிட்டு அதனை கண்டித்து அறிக்கை வெளியிட முடியாத அளவுக்கு வெளிவிவகார அமைச்சு கோழைத்தனமாக மாறியுள்ளது.

இவ்வாறான அறிக்கை ஒன்றை வெளியிடுவதை விட வெளியிடாமல் இருந்திருக்கலாம். பயங்கரவாத தாக்குதலை நடத்திய இஸ்ரேலின் பெயரை குறிப்பிட உங்களுக்கு தைரியம் இல்லை.

அதேபோன்று பாலஸ்தீனில் இடம்பெற்றுவரும் அநீதிகளை கண்டித்து, இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிகர் ஒட்டியமைக்காக இளைஞர் ஒருவர் பயங்கரவார தடைச்சட்த்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தார்.பயங்கரவாத விசாரணை பிரிவு இஸ்ரேலுக்கான கருவியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பயங்கரவார தடைச்சட்டத்தை நீக்குவதாக தெரிவித்த அரசாங்கம் தற்போது அப்பாவிகளுக்கு எதிராக அதனை பயன்படுத்தி வருகிறது” என கூறியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.