2022 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்சவை வெளியேற்றி ரணிலை கொண்டு வந்த விடயத்தில் இலங்கைக்கு இந்தியா வழங்கிய ஆதரவிலிருந்து வெளியேறி இருந்ததாக பிரித்தானியாவிலிருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி. அருஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
2009 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் ஜமேக்காவை தளமாகக்கொண்டு இயங்கும் ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அமைப்பில் விண்ணப்பமொன்றிற்கு இலங்கை இரகசியமாக விண்ணப்பித்திருந்ததாகவும், இதற்கு இந்தியா எதிர்ப்பினை வெளியிடாது தனது முழு ஆதரவினையும் வழங்கியதாகவும் கூறியுள்ளார்.
இதன் பின்னர் இந்த விடயம் வெளியில் கசிந்துள்ளதாகவும், ரணில் விடயத்தில் பிரித்தானியா மற்றும் இந்தியா அச்சத்தில் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,