கடந்த செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி சிட்னியில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட UL607 என்ற விமானத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலான
விசாரணை முடிவடையும் வரை கேப்டன் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என சிறிலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில், சிவில் விமான போக்குவரத்து விதிமுறைகளின்படி தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக சிறிலங்கன் எயார்லைன்ஸ் நேற்று (14) வெளியிட்ட ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
சிறிலங்கன் எயார்லைன்ஸ்
குறித்த அறிக்கையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் விமான நிறுவனம் முழுமையாக ஒத்துழைக்கிறது.
மேலும் விசாரணையின் முடிவு நிலுவையில் இருக்கும் நிலையில், கேப்டன் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு மற்றும் அனைத்து ஒழுங்குமுறை தேவைகளுக்கும் இணங்குதல் சிறிலங்கன் எயார்லைன்ஸின் முதன்மையான முன்னுரிமைகளாக உள்ளது” என அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
சிட்டினியிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட UL607 என்ற விமானத்தில், விமானிகள் கடும் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டதாகவும், அவர்களில் ஒருவர் ஏர்பஸ் ஏ330 விமானி அறையிலிருந்து பூட்டப்பட்டதாகவும் விமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.