முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள் : வெளியான காரணம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் (Colombo Bandaranaike International Airport) தரையிறங்க வந்த நான்கு விமானங்கள் மத்தள சர்வதேச விமான நிலையம் மற்றும் இந்தியாவின் (India) திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு திருப்பிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் இன்றைய தினம் (07.01.2025) நிலவிய பனிமூட்டமான காலநிலை காரணமாக இவ்வாறு திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று அதிகாலை 5:00 மணியளவில் டுபாயில் இருந்து வந்த சிறிலங்கன் ஏர்லைன்ஸின் (SriLankan Airlines) யூ.எல்-226 விமானம், சீனாவின் குவாங்சோவிலிருந்து வந்த சிறிலங்கன் ஏர்லைன்ஸின் UL-881 விமானம் திருப்பிவிடப்பட்டள்ளது.

விமான நிலைய அதிகாரிகள் 

மேலும், இந்தியாவின் பெங்களூரில் இருந்து அதிகாலை 05-05 மணிக்கு வந்த சிறிலங்கன் ஏர்லைன்ஸின் UL-174 விமானம் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

https://ibctamil.com/article/south-korean-accident-changes-made-sl-airport-1736149669

மேலும், துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து இன்று காலை 06:00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம், இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்காவில் இருந்து திருப்பி விடப்பட்ட விமானங்கள் காலை 09:00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு மீண்டும் திரும்பியுள்ளன.

காலை 07.00 மணியளவில், கட்டுநாயக்க விமான நிலையத்தை சூழ்ந்திருந்த அடர்ந்த மூடுபனி படிப்படியாக குறைந்து தற்போது விமான நிலையம் வழமை நிலைக்கு திரும்பியுள்ளதால், விமான சேவைகள் சாதாரணமாக நடைபெறுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.