‘ஸ்டார்லிங்க்’ இணைய சேவை இப்போது இலங்கையில் செயல்படத் தொடங்கியுள்ளதாக பிரபல தொழிலதிபர் எலோன் மஸ்க் அறிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பை அவர் தனது உத்தியோகபூர்க் எக்ஸ் கணக்கில் வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஓகஸ்ட் 14 ஆம் திகதி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், இலங்கையில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணைய சேவைகளை வழங்க ஸ்டார்லிங்க் லங்கா (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்திற்கு “தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்” உரிமத்தை வழங்கியது.
இந்த இணைய சேவை இலங்கையில் தற்போதுள்ள ஃபைபர் தொழில்நுட்ப இணைய சேவையை விட பல மடங்கு வேகமாக இருக்கும் என்றும், உலகில் எங்கிருந்தும் இந்த சேவையை அணுக உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Starlink now available in Sri Lanka! 🇱🇰 https://t.co/37X5hNOEfL
— Elon Musk (@elonmusk) July 2, 2025

