இந்திய அதானியின் முதலீட்டிலான, கொழும்பு துறைமுகத்தின் மேற்கு சர்வதேச
முனையம் (CWIT), அடுத்த மாதம் 1.6 மில்லியன் 20 அடி சமமான அலகு (TEU) திறனுடன்
செயற்படவுள்ளது.
அதே நேரத்தில் இலங்கை துறைமுக ஆணையகம் நிர்வகிக்கும் கிழக்கு கொள்கலன் முனையம்
(ECT), இந்த ஆண்டு இறுதியில் முழுமையாக செயற்படத் தொடங்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
ஆழ்கடல் முனையம் ஆண்டுக்கு சுமார் 3.2 மில்லியன் அலகுகளை கையாளும் திறனைக்
கொண்டுள்ளது,
இது 1,400 மீட்டர் நீளமும், 20 மீட்டர் ஆழமும் கொண்டது.
கப்பல்களின் சேவை
குறிப்பாக, முதல் கட்டத்தில் 800 மீட்டர் நீளமுள்ள கப்பல்துறை, இரண்டு பெரிய
கப்பல்களின் சேவையை ஒரே நேரத்தில் எளிதாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இது, அடுத்த மாத இறுதியில் முதல் கட்டம் செயற்பாட்டுக்கு வரும்நிலையில்,
மீதமுள்ள முனையம் 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நிறைவடையும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
பரிமாற்ற ஒப்பந்தம்
மேற்கு கொள்கலன் முனையத்தின் மேம்பாட்டிற்கான கட்டுமானம், செயல்பாடு மற்றும்
பரிமாற்ற ஒப்பந்தம் (Build, opreate and Transfer )2021,செப்டம்பர் 30
அன்று,துறைமுக அதிகார சபை மற்றும் கொழும்பு மேற்கு சர்வதேச கொள்கலன் முனையம்
(தனியார்) லிமிடெட் (CWIT) இடையே 35 வருட குத்தகை காலத்திற்கு கையெழுத்தானது.
இதேவேளை, கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இரண்டு முனையங்களும் நிறைவடைந்தவுடன்,
கொழும்பு துறைமுகத்தின் மதிப்பிடப்பட்ட ஆண்டு திறன் தோராயமாக 6-6.5 மில்லியன்
அலகுகளால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.