முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை மக்களுக்கு வெளியான கடும் எச்சரிக்கை

வீட்டில் இருந்து வேலை செய்து பெரும் தொகையை சம்பாதிக்கலாம் என்ற விளம்பரங்களை வெளியிட்டு இலங்கையர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் எனவே இது தொடர்பில் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டுமெனவும் குற்றப்புலனாய்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

 சமூக வலைத்தளங்கள் மூலமாகவே இந்த மோசடியான செயற்பாடு இடம்பெற்று வருகின்றமையும் கண்டறியப்பட்டுள்ளது.

   இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வீட்டில் இருந்து வேலை செய்து பெரும் தொகையை சம்பாதிக்கலாம்

வீட்டில் இருந்து வேலை செய்து பெரும் தொகையை சம்பாதிக்கலாம் என்ற விளம்பரங்களை வெளியிட்டு, ஒரு வணிகத்தில் முதலீடு செய்யுமாறு மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.    முதலில், இந்த முதலீட்டிற்கு ஒரு சிறிய தொகையை முதலீடு செய்யுமாறு குற்றவாளிகள் அறிவிக்கின்றனர்.  பின்னர், அந்த சிறிய தொகையை முதலீடு செய்தவர்களுக்கு சாதாரண இலாபமாக ஒரு தொகையை முதலீட்டுத் தொகையுடன் சேர்த்து வழங்குகின்றனர்.

இலங்கை மக்களுக்கு வெளியான கடும் எச்சரிக்கை | Strong Warning Issued To Sri Lankans

 பின்னர், முதலீட்டாளர்களுக்கு இலாபத்தை அதிகரித்து வழங்கி, அவர்களின் நம்பிக்கையைப் பெறுகின்றனர்.

 அதற்கு அடுத்த நடவடிக்கையாக மேலும் முதலீட்டு வாய்ப்புகள் உள்ளதாகக் கூறி பெரிய தொகையை முதலீடு செய்யுமாறு அறிவுறுத்துகின்றனர்.  இவ்வாறு முதலீடு செய்யப்பட்ட பணம் உள்ளூர் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படுகிறது. பல தடவைகள் இவ்வாறு பெரிய தொகைகளை முதலீடு செய்ய வைத்த பின்னர், முதலீட்டாளர்களுக்கு எந்தவொரு இலாபமும் வழங்கப்படுவதில்லை.

 நூதனமான மோசடி

முதலீட்டாளர்கள் இலாபம் கிடைக்கவில்லை என சமூக ஊடகங்கள் மூலம் குற்றவாளிகளிடம் விசாரிக்கும்போது, பாதுகாப்பு வரி, சுங்கக் கட்டணம் போன்ற கட்டணங்களைச் செலுத்தினால் மட்டுமே இலாபம் பெற முடியும் எனவும், அதற்கு மேலும் கூடுதல் பணம் செலுத்தினால் இலாபம் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

இலங்கை மக்களுக்கு வெளியான கடும் எச்சரிக்கை | Strong Warning Issued To Sri Lankans

 மேலும், மேற்குறிப்பிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் வீட்டில் இருந்து வேலை செய்து பெரும் தொகையை சம்பாதிக்கலாம் என்ற விளம்பரங்களை வெளியிடுகின்றனர்.

 இதற்கு இணைந்தவர்களின் வங்கிக் கணக்கு எண்களைப் பெற்று, அவர்களின் கணக்குகளுக்கு வரவு வைக்கப்படும் பணத்தை குற்றவாளிகள் குறிப்பிடும் வேறு கணக்குகளுக்கு மாற்றுமாறு சமூக வலைத்தளங்கள் ஊடாக அறிவுறுத்துகின்றனர். இதற்கு ஈடாக, முதலீடு செய்யப்பட்ட தொகையில் ஒரு கமிஷன் தொகையை கணக்கு உரிமையாளர்களுக்கு வழங்குவதாகக் கூறுகின்றனர்.

 இந்த முறையில், முதல் முறையில் முதலீடு செய்யப்பட்ட பணத்தை பல கணக்குகள் மூலம் மாற்றி, பணத்தைச் சுழற்றுவதாக விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

  எனவே இந்த மோசடி தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டக் கொள்ளப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.