முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பில் குழந்தை பெற்று யன்னலால் வீசிய சம்பவம்:நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் குழந்தை யன்னலால் வீசிய சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நேற்று (28) முற்படுத்தியபோது எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த உயர் தரத்தில் கல்வி கற்றுவரும் 18 வயதுடைய மாணவி நிறைமாத கர்ப்பிணியான நிலையில் சாதாரண வயிற்றுவலி என தெரிவித்து மட்டு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ஆரம்ப சிகிச்சைக்காக குறுந்தரிப்பு அலகு வாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விளக்கமறியல்

இந்த நிலையில் குறித்த மாணவிக்கு வயிற்றுவலிக்கான ஊசி மூலமாக வலிநிவாரண மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் குழந்தை பெற்று யன்னலால் வீசிய சம்பவம்:நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Student Birth Baby Throws In Batti Law And Order

இதனையடுத்து நிறைமாத கர்ப்பிணியாக வைத்தியசாலை வந்த அந்த பெண், அதிகாலை 5 மணியளவில் மலசல கூடத்திற்கு சென்ற நிலையில் குழந்தையை பெற்று யன்னலால் வீசியுள்ளார்.

இதன்போது, குறித்த குழந்தை யன்னலில் கீழ் உள்ள
பிளேற்றில் வீழ்ந்து அழுகுரல் கேட்டதையடுத்து தாதியர்கள் குழந்தையை
மீட்டுள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பில் கைதான மாணவியையும் அவரை கர்ப்பமாக்கிய 24 வயதுடைய காதலனையும் எதிர்வரும் 7ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்