வெலிகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எனினும், இது குறித்த அதிகாரபூர்வ உத்தரவு வழங்கப்பட்டதா என்பது தொடர்பில் உறுதிப்படுத்தல்கள் எதுவும் இல்லை.
துப்பாக்கிச் சூடு
முன்னதாக, வெலிகமவில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இதன்போது, ஒரு பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.