விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குளிக்கச்சென்ற கண்டியில் உள்ள ஒரு முக்கிய ஆண்கள் பள்ளியின் மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் இரண்டு மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர், ஒரு மாணவர் உயிரிழந்துள்ளார் என்று தெல்தெனிய காவல்துறை தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்ட இரண்டு மாணவர்கள் தெல்தெனிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
விகாரையை பார்வையிட சுற்றுலா சென்றவேளை சம்பவம்
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 12 ஆம் வகுப்பு படிக்கும் கவிதா நியங்கொட என்ற மாணவன் என்று தெல்தெனிய காவல்துறை தலைமையக அதிகாரி தெரிவித்தார்.

தெல்தெனிய காவல் பிரிவில் உள்ள ஒரு முக்கிய ஆண்கள் பள்ளியைச் சேர்ந்த 51 மாணவர்களும் இரண்டு ஆசிரியர்களும் தெல்தெனிய காவல் பிரிவில் உள்ள மபரகல ராஜமஹா விஹாரையைப் பார்வையிட வந்ததாகவும், அருகிலுள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்றபோது ஒருவர் நீரில் மூழ்கி இறந்ததாகவும் காவல்துறை குறிப்பிட்டது
காவல்துறையினர் மேலதிக விசாரணை
தெல்தெனிய உதவி காவல் கண்காணிப்பாளர் ஜெயந்த சமரக்கோனின் மேற்பார்வையில், சம்பவம் குறித்து தெல்தெனிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


