ஜனாதிபதி வேட்பாளராக நாமலின்(namal rajapaksa) வருகை வரவேற்கத்தக்கது என இந்தியாவின் முன்னாள் அமைச்சர் சுப்ரமணியன் சுவாமி(Subramanian Swamy) தெரிவித்துள்ளார்
ராஜபக்சவின் பாரம்பரியத்தை இந்தியா ‘குடும்பமாக’ ஏற்றுக்கொள்வதால், ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச நுழைவது வரவேற்கத்தக்கது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் நாமலுக்கு அமோக வரவேற்பு
ஓகஸ்ட் 21 ஆம் திகதி நாமல் தனது முதல் ஜனாதிபதி பேரணியை ஆரம்பிக்கவுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வடமாகாண உறுப்பினர் கீதாநாத் காசிலிங்கம்(Geethanath Cassilingham) விடுத்த அறிக்கைக்கு பதிலளித்த சுவாமி, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன் மற்ற அண்டை நாடுகளின் தலைவர்களைப் போல் அல்லாமல் இந்தியாவில் நாமலுக்கு அமோக வரவேற்பு இருப்பதாக தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksa) முடிவுக்குக் கொண்டுவந்ததன் காரணமாக ராஜபக்சாக்கள் வரவேற்கப்பட்டனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.