தம்பலகாமம் பிரதேச சபைக்குட்பட்ட தி/கிண்/அல் ஹிக்மா முஸ்லிம் மகா
வித்தியாலயத்தின் முன் வளாகத்தில் காணப்பட்ட மரம் திடீரென தீப்பற்றியுள்ளது.
இதனையடுத்து, தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளர் எச்.தாலிப் அலியின் தலையீட்டினால் தீ அணைக்கப்பட்டது.
தீயணைப்பு நடவடிக்கை
நிர்க்கதிக்குள்ளான இவ்வனர்த்த நிலையினை கட்டுப்படுத்த பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று
குழுவின் செயலாளர் K.T. பாயிஸ், சகோதரர் T.A. பைறூஸ், தம்பலகாமம் பொலிஸ் நிலைய
உத்தியோகத்தர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியப் பிரதிநிதிகள், சமூக
செயற்பாட்டாளர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.








