முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மக்களைத் தவறாக வழி நாடாத்தும் கஜேந்திரன் கூட்டணி! சுமந்திரன் சுட்டிக்காட்டு

மக்களைத் தவறாக வழி நாடாத்த வேண்டாமென நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் (Gajendrakumar Ponnambalam) தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் தனது உத்தியோகப்பூர்வ முகப்புத்தகத்தில் அவர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடகத்திற்கு தமிழரசு கட்சி குறித்து கருத்தொன்றை வழங்கி இருந்தார்.

தமிழரசுக் கட்சி

அதாவது, “தமிழரசுக் கட்சியின் செயலாளர் சுமந்திரன், தான் தயாரித்த ஏக்ய ராஜ்ய அரசியலமைப்பை வென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துகொண்டு அவர்களுக்கு திணித்து அதனை யாரும் எதிர்க்காமல் நடைமுறைப்படுத்த முயல்கின்றார்.

இந்தநிலையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாவது இதனை எதிர்க்கின்ற வகையில் செயற்படுவோம்.

அத்தோடு, இதற்கு துணைபோகும் வகையிலும் மற்றும் ஏக்யராஜ்யத்தை நிறைவேற்றுவதற்கும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்க கூடாது” என அவர் தெரிவித்திருந்தார்.

ஏக்கிய ராஜ்ய

இதற்கு பதிலளிக்கும் முகமாகவே சுமந்திரன் குறித்த பதிவை முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சுமந்திரன், “தற்போதைய அரசியலமைப்பில் ஒற்றையாட்சிக்கு நிகரான சிங்கள சொல்லாக பாவிக்கப்பட்டிருப்பது ஏக்கிய ரஜய எனும் சொல்.

மக்களைத் தவறாக வழி நாடாத்தும் கஜேந்திரன் கூட்டணி! சுமந்திரன் சுட்டிக்காட்டு | Sumanthiran Warns Gajendrakumar

இந்தநிலையில், நாங்கள் தயாரித்த வரைபில் பயன்படுத்தப்பட்டிருப்பது ஏக்கிய ராஜ்ய எனும் சொல்.

இந்த வரைபில் மூன்று மொழிகளிலும் நாங்கள் ஒரே சொற்றொடரைத்தான் பயன்படுத்தி இருந்தோம்.

ஒப்பந்தங்கள் 

இந்த விடயங்களை தெளிவாக விளங்கப்படுத்தாமல் ஏக்கிய ராஜ்யத்திற்கு இணங்கிவிட்டார்கள், ஏக்கிய ராஜ்யத்திற்கு இணங்கிவிட்டார்கள் என தெரிவித்து எந்த பயனும் இல்லை.

தமிழ் மக்களுக்கு இதனை விளங்கப்படுத்துவது கடினம், ஒற்றையாட்சியை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

மக்களைத் தவறாக வழி நாடாத்தும் கஜேந்திரன் கூட்டணி! சுமந்திரன் சுட்டிக்காட்டு | Sumanthiran Warns Gajendrakumar

ஆனால், சம்ஷ்டிக்குரிய அரசு என பெயர் இருக்க வேண்டும் என்று நாங்கள் நிர்பந்திக்கவில்லை.

தந்தை செல்வாவின் வழியும் அது அல்ல, அவர் கைசாத்திட்ட ஒப்பந்தங்கள் ஒன்றிலும் சம்ஷ்டி என்ற சொல் உபயோகிக்கப்படவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.             

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.