ஐபிஎல் வரலாற்றில்
ஒரே இடத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற லசித் மலிங்காவின் சாதனையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் முறியடித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 47வது போட்டி நேற்றையதினம்(29) கொல்கத்தாவில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையில் இடம் பெற்றது.
நாணயசுழற்சில் வெற்றிப்பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
ஐபிஎல் தரவரிசை பட்டியலில் திடீர் மாற்றம்: ஐதராபாத் அணியின் இடம் எது தெரியுமா..!
மலிங்காவின் சாதனை
20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 153 ஓட்டங்களை பெற்றது.
இப்போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் நிர்ணயித்த 154 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 17வது ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது,
நரேன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
தனது நான்கு ஓவர்களில் வெறும் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து முதல் இன்னிங்ஸில் அக்சர் பட்டேலின் விக்கெட்டைக் கைப்பற்றினார்.
குறித்த விக்கெட்டுடன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்
நரைன் வீழ்த்திய விக்கெட்டுக்களின் எண்ணிக்கை 69 ஆனது.
இந்த லீக்கில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையையும் படைத்தார்.
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய தங்க நிலவரம்
முறியடித்த வீரர்
முன்னதாக, லசித் மலிங்கா தனது ஐபிஎல் வாழ்க்கையில் வான்கடே மைதானத்தில் 68 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த மதிப்புமிக்க சாதனையை வைத்திருந்தார்.
இந்த சாதனை முறியடிக்கப்பட்டது.
டெல்லியில் மூத்த சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா 58 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 52 விக்கெட்டுகளுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.
இந்தியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் வான்கடே மைதானத்தில் 49 விக்கெட்டுகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
இந்த வெற்றியின் மூலம், கொல்கத்தா அணி
ஐபிஎல் 2024 புள்ளிகள் பட்டியலில் 12 புள்ளிகளுடன் 2 இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |