சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சிக்கியுள்ள நாசா (nasa) விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams) மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் நேரடி ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.
இவர்கள் இருவரும் விண்வெளியில் இருந்து இன்று (13.9.2024) இந்திய நேரப்படி இரவு 11:45 மணிக்கு நேரடி ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பானது நாசா+, நாசா செயலி மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச விண்வெளி நிலையம்
இதன்போது, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் தங்கள் நீட்டிக்கப்பட்ட பணியின் நுண்ணறிவு மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஜூன் 5 ஆம் திகதி போயிங்கின் ஸ்டார்லைனர் (Boeing Starliner) விண்கலத்தில் பூமியிலிருந்து புறப்பட்டனர்.
அவர்கள் பயணித்த விண்கலமானது ஜூன் 6 ஆம் திகதி சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது.
விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள்
இருப்பினும், விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருப்பது எதிர்பாராதவிதமாக நீட்டிக்கப்பட்டது.
எட்டு நாட்கள் பணிக்காக சென்ற அவர்கள், தற்சமயம் மூன்று மாதங்களாக அங்கு தங்கியுள்ளனர்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக விண்வெளி வீரர்கள் திரும்புவது 2025 பெப்ரவரி வரை தாமதமாகும் என்று நாசா அண்மையில் உறுதி செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.