இந்தியாவில் விஜய் தொலைக்காட்சி தயாரித்து வழங்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிந்துமயூரன் பிரியங்கா என்ற சிறுமி பாடி வருகின்றார்.
குறித்த சிறுமி கடந்த வாரம் நடைபெற்ற 10 பேர் கொண்ட பிரதான போட்டியாளர்கள் பட்டியலிலும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சிறுமி பிரியங்காவை நேரில் சந்தித்த யாழ். ஊடக மன்றத்தினர் பிரியங்காவை வாழ்த்தி நினைவுப் பரிசினையும் மலர் கொத்தினையும் வழங்கிவைத்துள்ளனர்.
குறித்த நினைவு பரிசானது, சிறுமியின் திறமையை பாராட்டி மேலும் உற்சாகத்தை வழங்கும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள் – கஜிந்தன்