முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஊழியர் சங்கம் ஆதரவு

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன் நிறுத்த வலியுறுத்தி, நான்கு அம்சக்
கோரிக்கைகளை உள்ளடக்கி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று(24.01.2025)
வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இது தொடர்பாக பல்கலைக்கழக ஊழியர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில்,

பல்கலைக்கழக மாணவர்களே நாளைய எமது சமுதாயத்தின் தூண்கள். பல்கலைக் கழகங்கள்
எமது சமுதாயத்தின் நீண்ட கால வளர்ச்சியினை நோக்காகக் கொண்டு செயற்பட
வேண்டும்.

பல்கலைக்கழக நிர்வாகத்தின் அசமந்த போக்கு

இருப்பினும், அண்மைக் காலங்களில் சமூகத்திற்கு அர்ப்பணிப்பு
மிக்கவர்களாகவும், வினைத்திறன் உள்ளவர்களாகவும் மாணவர்களை வலுப்படுத்துவதில்
பல்கலைக்கழகங்கள் பின் தங்கிவிட்டதாக எமது சமுதாயத்தில் கருத்து நிலவி
வருகின்றது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஊழியர் சங்கம் ஆதரவு | Support For Jaffna Uni Students Hunger Strike

எமது பல்கலைக்கழகம் எப்பொழுதும் மாணவர்கள் நலன் சார்ந்தே தனது தீர்மானங்களை
எடுத்து வருகின்றது என்பது வரலாறு. இனியும் அது தொடர வேண்டும் என்பது எமது
எதிர்பார்ப்பு.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து
24/01/2025 வெள்ளிக்கிழமை முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர். இந்த விடயத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் அசமந்தமாகச் செயற்படுவது
எமக்கு வேதனையை தருகின்றது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஊழியர் சங்கம் ஆதரவு | Support For Jaffna Uni Students Hunger Strike

எனவே, மாணவர்களின் சாத்வீக முறையான இப்போராட்டம் வெற்றி பெற அவர்களின்
கோரிக்கைகளை வெளிப்படைத்தன்மையுடன், உரிய சட்டதிட்டங்களுக்கமைய, நீதியாக,
காலந்தாழ்த்தாது விரைவில் தீர்த்துவைக்குமாறும் கேட்டுக்கொண்டு, பல்கலைக்கழக
ஊழியர் சங்கமாகிய நாமும் அவர்களுக்கு உறுதுணையாக நிற்போம் என
குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்