உச்சநீதிமன்றத்தின் பணப் பரிவர்த்தனைகளை டிஜிட்டல் முறைக்கு மாற்றும் செயற்பாடு நடைமுறைக்கு வந்துள்ளது.
அதன் பிரகாரம் உச்சநீதிமன்ற வழக்குகளுக்கான கட்டணங்கள் மற்றும் நீதிமன்ற அபராதங்கள் உள்ளிட்ட கொடுப்பனவுகளை ரொக்கப் பணத்துக்குப் பதிலாக வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் வசதி தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை உச்சநீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன நேற்று(10) ஆரம்பித்து வைத்துள்ளார்.

ஏனைய நீதிமன்றங்கள்
குறித்த வசதி படிப்படியாக ஏனைய நீதிமன்றங்களுக்கும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.


