முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிறிலங்கன் எயர்லைன்ஸை கையகப்படுத்த திட்டம்… போட்டியில் களமிறங்கியுள்ள புதிய நிறுவனம்

தேசிய விமான நிறுவனமான சிறிலங்கன் எயர்லைன்ஸின் பங்குகளை வாங்குவதற்கான ஏலத்தில் சுப்ரீம் குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடக அறிக்கைகளின்படி, கடந்த வாரம் (ஏப்ரல் 27) ஏலம் முடிவடைந்துள்ள நிலையில், ஷெரிஷா டெக்னோலஜிஸ் பிரைவேட் லிமிடெட்டின் கீழ் சுப்ரீம் குளோபல் நிறுவனத்தின் பங்கேற்பானது சிறிலங்கன் எயர்லைன்ஸின் பங்குகளை வாங்குவதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

சிறிலங்கன் எயர்லைன்ஸ் லிமிடெட்டின் பங்குகளை கையகப்படுத்துவதற்கு சாத்தியமான முதலீட்டாளர்களிடமிருந்து ஆறு (06) தகுதிக்கான கோரிக்கைகள் (RfQ) பெறப்பட்டதாக கடந்த வாரம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான நேர்முகப் பரீட்சைகள் இன்று முதல் ஆரம்பம்

ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான நேர்முகப் பரீட்சைகள் இன்று முதல் ஆரம்பம்

பங்குகளுக்காக போட்டி

இந்நிலையில், சிறிலங்கன் எயர்லைன்ஸின் பங்குகளுக்காக போட்டியிடும் ஆறு நிறுவனங்களில் ஷெரிஷா டெக்னோலஜிஸ் பிரைவேட் லிமிடெட் இருந்தது, ஆனால் அதன் உரிமை குறித்து கவலைகள் எழுப்பப்பட்டன.

சிறிலங்கன் எயர்லைன்ஸை கையகப்படுத்த திட்டம்... போட்டியில் களமிறங்கியுள்ள புதிய நிறுவனம் | Supreme Global Holdings Acquire Srilankan Airlines

பின்னர், சுப்ரீம் குளோபல் ஹோல்டிங்ஸ், இதற்கு முன்பு சன்எடிசன் எனேர்ஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் என்று அழைக்கப்பட்ட ஷெரிஷா டெக்னோலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் ஏல செயல்முறையில் நுழைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சுப்ரீம் குளோபல் ஹோல்டிங்ஸ், கத்தாரின் ஷேக் நயீப் பின் ஈத் அல் தானியின் தனியார் அலுவலகத்தின் முதலீட்டுப் பிரிவான MBS இன்வெஸ்ட்மென்ட்ஸ் உட்பட ஒரு வலுவான கூட்டமைப்பை உருவாக்கிய நிறுவனமாகவும் அறியப்படுகிறது.

குருநாகலில் மகிந்தவிற்கு அமோக வரவேற்பு

குருநாகலில் மகிந்தவிற்கு அமோக வரவேற்பு

கடனை வழங்கி உதவியது

சிறிலங்கன் எயர்லைன்ஸிற்கான தனது அண்மைய ஏலத்தில் கலந்துகொண்டது மாத்திரமல்லாமல், சுப்ரீம் குளோபல் ஹோல்டிங்ஸ், 2022 இல் இலங்கைக்கு ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடியின் போது, இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்கி உதவியது.

சிறிலங்கன் எயர்லைன்ஸை கையகப்படுத்த திட்டம்... போட்டியில் களமிறங்கியுள்ள புதிய நிறுவனம் | Supreme Global Holdings Acquire Srilankan Airlines

எண்ணெய் கொடுப்பனவுகளுக்கு இலங்கை ரூபாவை ஏற்றுக்கொள்வது போன்ற புதுமையான கொடுப்பனவு தீர்வுகளையும் வழங்கி, சுப்ரீம் குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் இலங்கைக்கு உதவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

பாகிஸ்தானிலிருந்து மீண்டும் பெரிய வெங்காயம் இறக்குமதி: வெளியான அறிவிப்பு

பாகிஸ்தானிலிருந்து மீண்டும் பெரிய வெங்காயம் இறக்குமதி: வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்