இலங்கை, 2024 முதல் 2033 வரையான அடுத்த தசாப்தத்தில், சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) 308
மில்லியன் அமெரிக்க டொலர்களை கூடுதல் கட்டணமாகச் செலுத்த உள்ளது.
இது அந்தக் காலப்பகுதியில் மொத்த கட்டணங்கள் மற்றும் வட்டிகளில் 15.8
சதவீதமாக இருக்கும் என்று, அமெரிக்காவின், பொருளாதாரம் மற்றும் கொள்கை
ஆராய்ச்சிக்கான மாநிலங்கள் சார்ந்த சிந்தனைக் குழு மையம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதன்படி, கடந்த ஆண்டு முதல் சர்வதேச நாணய நிதியத்தால் சுமத்தப்பட்ட கூடுதல் கட்டணங்களை எதிர்கொள்ளும் 22 பாரிய கடன்பட்ட நாடுகளின்
பட்டியலில் இலங்கையும் (Sri Lanka) இணைந்துள்ளது.
இலங்கையின் சீர்திருத்த வேகத்தை உறுதிப்படுத்த வலியுறுத்தும் ஐ.எம்.எப்
கடன் விகிதங்கள்
கூடுதல் கட்டணங்கள் என்பது குறிப்பிட்ட கால அடிப்படையில், அல்லது நிலையான
அடிப்படை வரம்புகள் நிலுவையில் உள்ள நாடுகளுக்கான கடன்களுக்கு, சர்வதேச நாணய
நிதியத்தால் விதிக்கப்படும் கட்டணங்கள் ஆகும்.
வழக்கமான வட்டி விகிதங்கள் மற்றும் சேவைக் கட்டணங்களுக்கு மேல், கட்டணங்கள்
கடன் விகிதங்களில் இரண்டு முதல் மூன்று சதவீத புள்ளிகளைச் சேர்க்கின்றன.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதான கணக்கில் 187.5 சதவீதத்தை தாண்டிய நாடுகளை
இலக்காகக் கொண்ட இந்த கூடுதல் கொடுப்பனவுகள், விவாதத்தையும் அதிருப்தியையும்
ஏற்படுத்தியுள்ளன.
விடுக்கப்பட்ட அழைப்பு
சமீபத்திய ஆண்டுகளில், பல உலகத் தலைவர்கள், வளரும் நாடுகளின் குழு, ஐக்கிய
நாடுகளின் அதிகாரிகள், மனித உரிமை நிபுணர்கள், முன்னணி பொருளாதார வல்லுநர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் ஆகியோர் சர்வதேச நாணய நிதியத்தின் கூடுதல்
கட்டணக் கொள்கையை இடைநிறுத்த அல்லது முற்றிலுமாக நீக்குவதற்கு அழைப்பு
விடுத்துள்ளனர்.
எனினும், இந்த அழைப்புகளுக்கு இதுவரை சர்வதேச நாணய நிதியம் செவிசாய்க்கத்
தவறிவிட்டது.
இதற்கு, சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கை முடிவுகளில் பெரும் செல்வாக்கை
செலுத்தும் அமெரிக்க அரசாங்கத்தின் எதிர்ப்பே காரணம்” என்று குறித்த அமெரிக்காவின், பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆராய்ச்சிக்கான மாநிலங்கள் சார்ந்த
சிந்தனைக் குழு மையம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஆளுநர் பதவிகளில் ஏற்படவுள்ள மாற்றங்கள்
ராஜபக்சர்கள் மீது கடும் குற்றச்சாட்டு : கடும் கோபத்தில் நாமல் எம்.பி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |