மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இந்திய அரசாங்கத்தினால்
நிர்மாணிக்கப்பட்டுவரும் சத்திரசிகிச்சை பிரிவு தொகுதி விரைவில் சேவை
திறக்கப்படும் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர்
திருமதி க.கலாரஞ்சனி தெரிவித்துள்ளார்.
நேற்று (02.05.2024) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா விஜயம்
மேற்கொண்டார்.
இதன்போது இந்திய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டுவரும் சத்திரசிகிச்சை
பிரிவு தொகுதியினை இந்திய தூதுவர் பார்வையிட்டார்.
இலங்கை-இந்திய உறவு திட்டத்தின் கீழ் சுமார் 280மில்லியன் ரூபா செலவில் இந்த
சத்திரசிகிச்சை பிரிவு தொகுதி சகல வசதிகளுடனும் அமைக்கப்பட்டுவருகின்றது.
இதன்போது சத்திரசிகிச்சை பிரிவு தொகுதியினை பார்வையிட்ட தூதுவர் வைத்தியசாலை
நிர்வாகத்துடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இந்த சந்திப்பின்போது சத்திரசிகிச்சை பிரிவு தொகுதி நிர்மாணிப்பின் நிலைமை
தொடர்பில் கேட்டறிந்துகொண்ட தூதுவர் அங்கு தேவையாகவுள்ள மேலதி தேவைப்பாடுகள்
குறித்தும் கேட்டறிந்துகொண்டார்.
இந்த சந்திப்பில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர்
திருமதி க.கலாரஞ்சனி,பிரதி பணிப்பாளர்,சிரேஸ்ட சித்தர சிகிச்சை நிபுணர்
ஜீப்ரா,சிரேஸ்ட பொது வைத்திய நிபுணர் மதனழகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |