யாழ்ப்பாணம்(Jaffna) – வட்டுக்கோட்டை பகுதியில், 5 பனை மர குற்றிகளை கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை வட்டுக்கோட்டை காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்றையதினம்(04.12.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பனை மரக் குற்றிகளை அனுமதிப்பத்திரம் இன்றி கடத்திச் செல்ல முற்பட்டதாக வட்டுக்கோட்டை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது நடவடிக்கை
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதையடுத்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் ஒருவருடை, 45ஆயிரம் ரூபா பெறுமதியான கைப்பேசியானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் களவாடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறை விசாரணை
அந்தவகையில் விசாரணைகளை மேற்கொண்ட வட்டுக்கோட்டை காவல்துறையினர் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை நேற்றையதினம்(03) கைது செய்துள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பான விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக தகவல் – கஜிந்தன்