வவுனியா(Vavuniya) – ஓமந்தை, சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த வாள்வெட்டு சம்பவம் இன்று(01.12.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, நாவற்குளம் பகுதியை சேர்ந்த 46 வயதுடைய செல்வநிரோயன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
வாள் வெட்டு சம்பவம்
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் மாடுகளை மேய்த்துக்கொண்டுவந்த குடும்பஸ்தர் மீது குழுவொன்று வாளால் தாக்கியுள்ளனர்.
இதனால் படுகாயமடைந்த குடும்பஸ்தர் அயலவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வாள் வெட்டு சம்பவம் தொடர்பாக ஓமந்தை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.