ஐக்கிய மக்கள் சக்தியின் (sjb)இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள(Thalatha Athukorala) தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக இன்று (21) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தாலும் தனது அரசியல் பயணம் தொடரும் என அவர் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு(ranil wickremesinghe) ஆதரவளிக்கும் நோக்கிலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குற்றம் மனதை வதைத்துக்கொண்டிருக்கின்றது
“ ஐக்கிய தேசியக் கட்சியை பிளவுபடுத்தியமை தொடர்பில் எனக்கு இன்றளவிலும் கவலை உள்ளது. நாடாளுமன்ற உறுப்புரிமை கிடைக்கப்பெற்றிருந்தாலும் அந்த குற்றம் மனதை வதைத்துக்கொண்டிருக்கின்றது.” எனவும் தலதா குறிப்பிட்டார்.
தலதா அத்துகோரள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்த காமினி அத்துகோரலவின் சகோதரி ஆவார்.
அவர் 2004 இல் முதன்முதலில் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு
மேலும், 2010, 2015 மற்றும் 2020 பொதுத் தேர்தல்களில், அவர் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2020 இல், அவர் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து 45,105 வாக்குகளைப் பெற்று ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.