தலவாக்கலை – தவலந்தென்ன வீதி மண்சரிவினால் சேதமடைந்துள்ளது.
கொத்மலை பாலுவத்த பகுதியில் தலவாக்கலை மற்றும் தவலந்தென்ன வழியாக செல்லும் கொத்மலை வீதியின் 100 மீட்டர் பகுதி மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாயத்தில்
இதன் காரணமாக, நிவாரணக் குழுக்கள் கொத்மலை பகுதியை அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கொத்மலை, பாலுவத்த பகுதியில் பல வீடுகள் மண்சரிவு அபாயத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

