முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விடுதலைப்புலிகளின் காலத்தில் பயன்படுத்தப்பட்ட இயற்கை வளத்தின் இன்றைய நிலை: பொதுமக்கள் கவலை

Courtesy: uky(ஊகி)

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வந்த இயற்கை வளங்களில் ஒன்று தற்போது பயன்படுத்தப்படாது இருப்பது கவலைக்குரிய விடயமாகும் என மக்களால் அதன் நினைவுகள் மீட்டப்படுகின்றன.

வேலிகளை அடைக்கும் போது கட்டுவதற்காக மாங்கொடியும் தேவலங்கொடியும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டிருந்தது. வீட்டின் கூரைகளை வேயும் போதும் வரிச்சுத்தடிகளை கட்டிக்கொள்ள இக்கொடிகள் பயன்படுத்தப்பட்டது.

இப்போது அவற்றுக்குப் பதிலாக அதிகளவில் “டயர் நூல்” பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது இலகுவில் உக்கலடையாத பொருளாக இருப்பதால் தீமைகளும் உண்டு என விவசாயிகள் தங்கள் நினைவுகளை மீட்டியிருந்தனர்.

பொருளாதார தடையின் போதும் மக்கள் இயல்பாக வாழ்வதற்கேற்ற சூழலினை அவர்கள் ஏற்படுத்தியிருந்தனர் என மக்கள் தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டிருந்தனர்.

வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய விவகாரம் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி

வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய விவகாரம் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி

மாங்கொடி

காட்டில் ஏறிகளாகவும் நிலப்படரிகளாகவும் வளரும் மாங்கொடிகளில் நிலப்படரிகளே பயன்பாடு மிக்கன.

விடுதலைப்புலிகளின் காலத்தில் பயன்படுத்தப்பட்ட இயற்கை வளத்தின் இன்றைய நிலை: பொதுமக்கள் கவலை | Tamil Eelam Side Nature

ஏறிகளாகவும் படரிகளாகவும் வளரும் மாங்கொடிகளின் இலைகளை ஆடுகள் விரும்பிச் சாப்பிடுவதால் ஆடு வளர்ப் போருக்கும் அதிக பயனுடையதாக இருந்திருந்தது.

மாங்கொடிகள் கடும் மண்ணிறத்தில் உள்ள தண்டுகளையும் நீலப் பச்சை இலைகளில் வெள்ளைக் கோடுகளைக் கொண்ட இலைகளையும் கொண்டிருப்பவை.

தண்டிலும் இலைகளிலும் காயங்கள் ஏற்படும் போது வெள்ளை நிறத்தில் பால் போன்ற திரவம் வெளியேறும். தண்டு நீண்டு வளரக்கூடிய மாங்கொடிகளின் தண்டுகள் மெல்லிய நெகிழும் இயல்புடையவையாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனந்த மூலா, நன்னாரி, நறு நீண்டி என வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. மூலிகைச் செடியாகவும் இது இருக்கின்றது. கொமிடெஸ்மஸ் இண்டிகஸ் என்பது இதன் விஞ்ஞானப் பெயராகும்.

வேலிகளை அடைக்கும் போது கம்பிகளை அல்லது தடிகளை இறுக்கமாக கட்டி வைப்பதற்கு இவை பொருத்தமானதாக இருக்கின்றது. உலரும் முன் கொடிகளால் கட்டி விட்டால் அவை வெய்யிலில் உலர்ந்து காய்ந்து விடும்.

அப்போதும் உறுதியான பிணைப்பினை அவை கொண்டிருக்கும். ஒரு வருடத்துக்கும் மேலான காலத்திற்கு மாங்கொடிகளால் அடைக்கப்பட்ட வேலிகள் சிதையாமல் இருந்ததாக மரக்கறிகள் தோட்டத்தினை செய்து வந்த விவசாயி தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

வீட்டின் கூரைகளில் வரிச்சுக்களை கட்டி கிடுகு அல்லது பனையோலையால் வேயும் போது பயன்படுத்தப்படும் மாங்கொடிகள் மூன்று வருடங்களாக பயன்பட்டபடி இருந்திருந்தன எனவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டார்கள்.

இலங்கைக்காக சீனாவிடம் மனோ கணேசன் முன்வைத்த கோரிக்கை

இலங்கைக்காக சீனாவிடம் மனோ கணேசன் முன்வைத்த கோரிக்கை

தேவலங்கொடி

தேவலங்கொடி அல்லது பேய்க்கொடி என அழைக்கப்படும் மற்றொரு கொடி வகையும் வேலிகளை கட்டுவதற்காக அதிகளவில் பயன்படுத்தப்பட்டிருந்தன.

விடுதலைப்புலிகளின் காலத்தில் பயன்படுத்தப்பட்ட இயற்கை வளத்தின் இன்றைய நிலை: பொதுமக்கள் கவலை | Tamil Eelam Side Nature

மாங்கொடியின் அதே பயன்பட்டிற்காக தேவலங்கொடியும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

மாங்கொடியிலிருந்து பொதுவாக எல்லா இயல்புகளிலும் வேறுபட்டிருக்கும் தேவலங் கொடியானது வேலிகளைக் கட்டுவதற்கேற்ற நெகிழும் தன்மையுடையதாக இருப்பதனை அவதானிக்கலாம்.

பாசிஃப்ளோரா ஆரிகுலட்டா என்பது இதன் விஞ்ஞானப்பெயராக அமைகின்றது.

ஆடு வளர்ப்போரிடையே ஆடுகளை கட்டி வைப்பதற்காக தேவலங்கொடி பயன்படுத்தப்பட்டிருந்ததையும் மககளிடையே மேற்கொண்ட தேடலின் போது அறிய முடிந்தது.

பச்சை நிறத்திலான தண்டினைக் கொண்டுள்ள இந்தக் கொடிகள் மாங்கொடியிலும் பெரிய தெளிவான பச்சை நிறத்திலான இலைகளைக் கொண்டுள்ளன.

இக்கொடிகளின் தண்டு, இலைகளில் ஏற்படும் காயங்களில் இருந்து மாங்கொடியினைப் போல் வெள்ளை நிறத்திலான பால் வெளிவருவதில்லை. நிறமற்ற ஆனால் சுவையுடைய திரவம் கசிவதனை அவதானிக்கலாம்.

தேவலங்கொடிகளும் மாங்கொடிகளைப் போலவே ஏறு கொடிகளாகவும் நிலப்படரிகளாகவும் வளர்கின்றன. இவற்றில் ஏறு கொடிகளும் நிலப்படரிகளும் கயிறுகளைப் போல் கட்டுவதற்காக பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பிரதேச செயலகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பிரதேச செயலகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி

டயர் நூல் 

வாகனங்களுக்கு பயன்படுத்தப்பட்டு பழுதடைந்த ரயர்களில் இருந்து பெறப்படும் கயிறுகளைப் போல் பயன்படுத்தக் கூடிய நூல் போன்ற இழையினையே டயர் நூல் என மக்களால் அழைக்கப்படுகின்றது.

விடுதலைப்புலிகளின் காலத்தில் பயன்படுத்தப்பட்ட இயற்கை வளத்தின் இன்றைய நிலை: பொதுமக்கள் கவலை | Tamil Eelam Side Nature

இது வலுவானதாகவும் பயன்படுத்த இலகுவானதாகவும் இருப்பதினால் மக்கள் அதிகம் அதனை விரும்பிப் பயன்படுத்தி வருகின்றனர்.

எனினும் இவை மாங்கொடிகள், தேவலங்கொடிகளைப் போல் சூழல் நேயமற்றவையாக இருக்கின்றன என சூற்றுச் சூழலியலாளர்கள் கருத்துரைக்கின்றனர்.

டயர் நூல்களின் பயன்பாடு விடுதலைப்புலிகளின் காலத்திலும் இருந்தது.எனினும் அப்போதெல்லாம் அவற்றின் பாவனை இன்றுள்ளது போல் அதிகளவில் இருந்ததில்லை.

மாங்கொடி மற்றும் தேவலங்கொடிகளே அதிகம் பாவனையில் இருந்தது.வீடுகளின் மண் சுவர்களை தடிகளையும் களிமண்ணையும் கொண்டு அமைக்கும் வேலையில் ஈடுபட்டு வந்த உடுப்புக்குளத்தில் வாழ்ந்த ஐயாத்துரை என்ற மலையக வயோதிபர் குறிப்பிட்டிருந்தார்.

அவர் தடிகளையும் களிமண்ணையும் கொண்டு சுவர்களை ஆக்குவதில் கைதேர்ந்தவராக இருந்தார் என அவருடனான தன் நினைவுகளை கவிஞர் நதுநசி குறிப்பிட்டிருந்தார்.

டயர் நூல்களை கொண்டு பயன்படுத்தப்பட்ட வேலிகள் அகற்றப்படும் போது குப்பைகளாக அமைவனவற்றில் டயர் நூல்களும் கழிவாக குவிக்கப்படுகின்றன.

அந்த நிலங்களை மீண்டும் ஒரு விவசாய பயன்பாட்டுக்காக தயார்ப்படுத்தும் போது பாரியளவிலான அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிடுவதாகவும் மாங்கொடிகள் அவ்வாறில்லை.

அவை கழிவுகளாகும் போது உக்கலடைந்து விடுகின்றன என தன் அனுபவங்களை மற்றொரு விவசாயி பகிர்ந்து கொண்டார்.

கருசரு திட்டத்தின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்

கருசரு திட்டத்தின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்

மறந்து போகின்ற மாங்கொடி,தேவலங்கொடி 

மாங்கொடிகளையும் தேவலங்கொடிகளையும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற உண்மையை இன்றைய இளந்தலைமுறை மறந்து விட்டது.

விடுதலைப்புலிகளின் காலத்தில் பயன்படுத்தப்பட்ட இயற்கை வளத்தின் இன்றைய நிலை: பொதுமக்கள் கவலை | Tamil Eelam Side Nature

பலருக்கு இந்த கொடிகளையே இனம் காண முடியவில்லை என்ற உண்மை கசப்பானதாகவே இருக்கிறது.

நாம் வாழும் சூழலில் உள்ள வளங்களைப் பற்றி அறிந்திருப்பதோடு அவற்றின் உச்ச பயன்பாட்டைப் பெற்று வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.எனினும் இன்று அந்த பண்பாடு காணாமல் போய்விடுவதாக வாயோதிபர்களிடையே கவலை நிலவி வருவதையும் அவதானிக்க முடிகின்றது.

வன்னி பெரு நிலப்பரப்பின் கிழக்குப் பக்கங்களில் உள்ள நிலங்களில் மாங்கொடியும் தேவலங்கொடியும் இன்றும் அதிகளவில் வளமான வளர்சியோடு வளர்ந்திருப்பதனை அவதானிக்க முடிகின்றது.

மாங்கொடி என அழைக்கப்படும் நன்னாரி இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், மலேசியா , வியட்நாம் போன்ற நாடுகளிலும் அதிகளவில் வளர்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருத்தப்பணிகளுக்கு முன்மொழியப்படாது புறக்கணிக்கப்படும் முல்லைத்தீவு வீதி

திருத்தப்பணிகளுக்கு முன்மொழியப்படாது புறக்கணிக்கப்படும் முல்லைத்தீவு வீதி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.